2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் நிலாதிருகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் உலகையே உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் மிகப்பெரிய நல நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த இரண்டு நாடுகளும் உருகுலைந்து போனதோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகினர். தற்போது வரை இந்த நல்லடக்கத்திற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நியூசிலாந்து நாட்டிலும் பிப்ரவரி 15ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் எந்த வித உயிர் சேதமோ பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இது தொடர்பாக விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. இந்த மையத்தின் செய்தி குறிப்பில் ஜப்பான் நாட்டின் கிழக்கு தீவான ஹொக்கைடோ தீவின் கிழக்குப் பகுதியில் 6.1 லிட்டர் அளவிற்கு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.