fbpx

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பீதியில் மக்கள்..! ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு…!

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

தைவானின் கிழக்கு மாகாணமான Hualien இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஹுவாலியன் மற்றும் தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 14 பேர் இறந்தனர். தைவான் இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது. அடிக்கடி இந்த பகுதி பூகம்பங்களுக்கு உள்ளாகிறது. 2016 இல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

உங்களுக்கு பறவைக் காய்ச்சலா..? இந்த அறிகுறிகள் இருக்கா..? உடனே மருத்துவமனைக்கு போங்க..!!

Tue Apr 23 , 2024
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள், பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். bird flu | கேரள மாநிலத்தில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

You May Like