fbpx

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி…

நேபாளத்தின் காத்மாண்டுவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 147 கிமீ தொலைவில் கோட்டாங் மாவட்டத்தின் மார்டிம் பிர்டாவைச் சுற்றி காலை 8.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் ஆழம் கிழக்கு நேபாளத்தில் 10 கிமீ தொலைவில் கண்காணிக்கப்பட்டது, இது 27.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.67 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் தீர்மானிக்கப்பட்டது. நகர் முழுவதும் நடுக்கம் உணரப்பட்டது. இதுவரை, காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.. எனினும் இதுகுறித்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை..

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளன, அத்தகைய பேரழிவுகளை நிர்வகிக்க நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..

Maha

Next Post

திடீர் ட்விஸ்ட்.. டிடிவி தினகரனை வரவேற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...

Sun Jul 31 , 2022
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.. ஓ அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி […]

You May Like