நேபாள நாட்டின் லெபுசே என்ற நகரில் இருந்து 93 கிமீ தொலைவில் இன்று (ஜனவரி 7) காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் – சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. வீடுகள், கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கத்தின் பாதிப்பு வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, பீகார் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதன் தாக்கல் சீனா, பங்களாதேஷ், பூடான் பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஏதேனும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.