டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. அவர் ஹிந்தியில் பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்து இருக்கிறார். சமீப காலமாகி தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது ஹிந்தியில் மீண்டும் களமிறங்க இருக்கிறார். பிரபல இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷ்மையா. இசை அமைப்பாளருமான இவர், கமலின் ‘தசாவதாரம்’ படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், ‘தி எக்ஸ்போஸ்’ என்ற இந்தி, த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். இது வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகத்தை ‘படாஸ் ரவிகுமார்’ என்ற பெயரில் உருவாக்குகிறார். இதற்கு அவரே இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா வில்லனாக நடிக்கிறார். இசைக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது