fbpx

பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி மற்றும் குடும்ப புகைப்படம் வைரல்.!

தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 1994-ம் ஆண்டில் லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்‌. இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்கள் நீடித்து மகிழ்ச்சியாக இருந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் பொன்னி வர்மா என்கிற பெண்ணை கடந்த 2010-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மணம் முடித்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், பிரகாஷ் ராஜ் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Baskar

Next Post

தீராத வயிற்று வலி..!! 50 வயது முதியவரால் கர்ப்பமான 16 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்..!!

Fri Nov 4 , 2022
திருவாலங்காடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் திருத்தணி மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவலங்காடு அருகே உள்ளது பரேஸ்புரம் இருளர் காலனி. இந்த காலனியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை திருவாலங்காடு அரசு ஆரம்ப […]

You May Like