fbpx

வீடியோ: “பிரான் பிரதிஷ்ட்டை..” “பாலகனாக கண்களைத் திறந்த ஸ்ரீராமர்” பிரதமர் மோடி சிறப்பு பூஜை.!

நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் இன்று தொடங்கியது. 7000 சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜையுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

இன்று காலை அயோத்தி நகர் வந்தடைந்த பிரதமர் மோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராமஜென்ம பூமிக்கு வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகள் மற்றும் சிலை பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்வுகள் தொடங்கியது. பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கருவறையில் வைக்கப்பட்டிருந்த ராம் லாலாவின் குழந்தை பருவ சிலைக்கு பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்தார். மோகன் பகவத் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர் . பிரதமர் மோடி தாமரை இலைகளைக் கொண்டு ஸ்ரீராமரின் சிலையை பூஜித்து பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வின்போது கூடியிருந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர். பக்தர்களின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி ஆசிர்வதிக்கப்பட்டது.

Next Post

அப்படினா விவாகரத்து கன்பார்ம்..!! ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி வந்த அபிஷேக் பச்சன்..!!

Mon Jan 22 , 2024
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் குடும்பத்தினர் வந்தனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் இவர்கள் வந்திருப்பதால் விவாகரத்து சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற திரை நட்சத்திரங்களில் அமிதாப்பச்சனும் ஒருவர். இன்று காலை தனது மகன் அபிஷேக் பச்சனுடன் இவர் அயோத்தி வந்தடைந்தார். ஆனால், இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் […]

You May Like