என்னவளே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சினேகா. இதைத்தொடர்ந்து, இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் சினேகா-பிரசன்னா ஜோடியும் ஒன்று. பலருக்கு பிடித்தமான இந்த ஜோடி, கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் தங்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணதிற்கு பிறகு, தனது குடும்பத்தை கவனித்து வந்த சினேகா, கடந்த 2020ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும், விஜய்யின் கோட் படத்தில் நடித்ததின் மூலம் மீண்டும் ரசிகர்கின் கவனத்தை ஈர்த்த அவர் கடைசியாக டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இந்நிலையில், ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் சினேகா குறித்து அவரது கணவரான பிரசன்னா, தகவல் ஒன்றை அளித்துள்ளார். தனது மனைவியுடன் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரசன்னா, சினேகாவுக்கு ஓசிடி என்ற பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், நாங்கள் வீட்டையே 3 முறை மாற்றியிருக்கோம்.
அவங்க மாத்தாம இருக்குற ஒரு விஷயம் என்றால் அது நான் தான் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய சினேகா, எனக்கு எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும், கிச்சன் சுத்தமாக இருக்கணும் என்று எதிர்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும் பயப்பட தேவையில்லை, எல்லா விஷயங்களும் சுத்தமாக இருந்தால் போதும்” என்று கூறியிருக்கிறார்.
Read more: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது ஏற்பட்ட ஆசை; 4 பேர் செய்த காரியத்தால் பரபரப்பு..