fbpx

தமிழ்நாட்டில் முன்கூட்டியே திறக்கப்பட்ட பள்ளி..!! எங்கு தெரியுமா..? எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்ன. இதையடுத்து, ஜூன் 7ஆம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இதற்கிடையே, சென்னை ராமாபுரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி இன்று பள்ளியை திறந்துள்ளது. ஜூன் 7ஆம் தேதிதான் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் பள்ளி திறக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஜூன் 7ஆம் தேதிக்கு முன்னர் மெட்ரிக் பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்கக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chella

Next Post

செங்கல்பட்டு| பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்……!

Thu Jun 1 , 2023
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததை […]

You May Like