fbpx

’வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்’..! – அமைச்சர் செந்தில் பாலாஜி

சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனமழையால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரம் விழுந்ததால் 150 மின்மாற்றிகள் சேதமாகியுள்ளது. இன்று மாலைக்குள் மரங்கள் அகற்றப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்படும். காவிரி கரையோரப் பகுதிகளில் நீர் வடிந்தவுடன் மின் விநியோகம் தொடங்கும். சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு காவிரி கரையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

’வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்’..! அமைச்சர் செந்தில்பாலாஜி

சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி முடிவடைந்ததும் மீதமுள்ள மாவட்டங்களின் விவரங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை – மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ச்சர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியாகும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..

Fri Aug 5 , 2022
கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.. பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது… தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை […]

You May Like