ப்ரீகாபலின் மாத்திரை (Pregabalin Tablet) வலிப்பு நோய், நரம்பு வலி மற்றும் பதற்றம் ஆகியவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. ஆனால், இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில், ப்ரீகாபலின் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதை உட்கொள்பவர்கள் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை என்றும் சொல்லப்பட்டுகிறது.