fbpx

கர்ப்ப கால தசைப்பிடிப்பு!… உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?… உங்களுக்கான பதிவு இதோ!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் குறித்து பார்க்கலாம்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்கள் திடீரென தசைப்பிடிப்பால் தொடர்ந்து விளையாட முடியாமல் ஓய்வெடுக்கச் செல்வதை பார்த்திருக்கிறோம். அது போன்ற ஒரு கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம் .அது கர்ப்ப ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் ‌.

‘சோம்பல் முறிப்பது’ என்ற உடலை ‘ஸ்ட்ரெட்ச்’ செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும். ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.

Kokila

Next Post

65 கி. மீட்டர்‌ வேகத்தில் சூறாவளி காற்று...! யாரும் கடலுக்கு போக வேண்டாம்...! வானிலை மையம் எச்சரிக்கை...

Mon Jun 26 , 2023
தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like