fbpx

கொடூரத்தின் உச்சம்! … கர்ப்பிணி வழிமறித்தும் நிதி நிறுவனஅதிகாரிகள் எடுத்த நடவடிக்கை … டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலியான அதிர்ச்சி….

விவசாயி ஒருவரின் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையின் போது வாகனத்தின் முன் வழிமறித்த கர்ப்பிணியை கண்டும் காணாமல் டிராக்டரை ஓட்டிச் சென்றதால் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்லேஷ் மேத்தா . செவித்திறன் குறைபாடு உடைய விவசாயியான இவர் மகிந்த்ரா நிறுவனத்தில் லோனில் டிராக்டர் வாங்கியுள்ளார். அதிகபட்ச தவணைகளை கொடுத்துவிட்ட நிலையில் ரூ.1.3 லட்சம் மட்டுமே பாக்கி வைத்திருந்திருக்கின்றார். இதனால் அடிக்கடி அந்த பணத்தை கேட்டு அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளனர். பணத்தை கட்டவில்லை என்றால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து உள்ளனர் . ஆனால் முறையாக நோட்டீஸ் எதையும் அவர்கள் அனுப்பவில்லை. மேத்தா , சில நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் அதிகாரிகள் பறிமுதல் நடவடிக்கைக்காக வந்துள்ளனர். அவரது டிராக்டரை காப்பாற்றிக் கொள்ள நினைத்த மேத்தா அவர்களை துரத்தியுள்ளார். ஆனால் பறிமுதல் செய்து கொண்டு டிராக்டரை அதிகாரிகள் ஓட்டிச் சென்றனர். தான் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். மொத்தமாக பணம் செலுத்துமாறு கேட்ட அதிகாரிகள் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மேத்தாவின் மகள் , அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாகனத்தை வழிமறித்து நின்றுள்ளார். ஆனால் , எதற்கும் செவி சாய்க்காத அதிகாரிகள் வாகனத்தை தொடர்ந்து இயக்கியுள்ளனர். அப்போது சக்கரத்தில் சிக்கிய மேத்தாவின் மகள் பறிதாபமாக உடல் நசுங்கினார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிய கிராம மக்கள் அதிகாரிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் ஏற்கனவே அவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்து 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சம்பவத்தில் தொடர்புடைய நிதி நிறுவனத்தின் பணம் வசூல் செய்யும் மேலாளர் மற்றும் முகவர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படாமல் திடீரென பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்ப்பட்டவர்கள் தரப்பு மனோஜ் ரத்தனிடம் தெரிவித்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மஹிந்திரா நிறுவனம் பதில் ..  : இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளித்துள்ள மகிந்திரா நிறுவனம் அனைத்து தரப்பிலிருந்தும் விசாரணை நடத்தும் எனவும் . இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனது. பணம் வசூல் செய்யும் முகவர்கள் குறித்து உரய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Next Post

நிதி நிறுவன ஊழியர்கள் செய்த அட்டூழியம்... டிராக்டர் ஏற்றி கர்ப்பிணிப் பெண் படுகொலை...!

Sat Sep 17 , 2022
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார். மாதம் தோறும் கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் கடன் தொகை 1.30 லட்சம் பாக்கி இருந்தது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷை தொடர்ந்து தொல்லை […]

You May Like