தாயின் கருப்பையில் இருக்கும் போது பச்சிளம் குழந்தையின் மூளையை கொரோனா தாக்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2020இல் கர்ப்பமாக இருந்த 2 இளம் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், முறையான வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் இருந்ததாக மியான்மர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில், ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்ததாகவும், இரண்டு குழந்தைகளுக்கு மூளையிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.