fbpx

கர்ப்பிணிகளே கவனமாக இருங்கள்!… நீரிழிவு நோய் எப்போது ஏற்படும்?… எப்படி தடுப்பது?

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான். கர்ப்பகால நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம், எனவே உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க சிகிச்சையைத் தொடங்கலாம். கர்ப்பகால நீரிழிவு பொதுவாக கர்ப்பத்தின் 24 வது வாரத்தில் உருவாகிறது, எனவே நீங்கள் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில் நீரிழிவு நோய் பிரச்னை உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான். ஆனால் கர்ப்ப காலத்திற்குப் பின் உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் பிரச்சினை வந்தால் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.ஆனால் சில நேரங்களில் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இன்சுலின் தேவைப்படலாம். கர்ப்பிணி சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை அலட்சியம் செய்தால் அது அவருக்கு மட்டுமில்லாத அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு உடல் நலம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு நோயை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது. கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவது ஆபத்தான ஒன்று அல்ல. அதை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது தான் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஆபத்தை உண்டு பண்ண கூடும்.கர்ப்பகால சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரும் என்றால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்கனவே உள்ளவர்கள், அதிக எடை கொண்ட குழந்தையின் பிறப்பை உடையவர்கள், ப்ரீ டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படக்கூடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் பிரச்சனையால் தனிப்பட்ட அறிகுறிகள் அதிகமாக தெரியாவிட்டாலும் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல், தாகம், சோர்வு போன்றவை காணப்படலாம். எனவே கர்ப்பகால சர்க்கரை நோய் பிரச்சனையை சரிசெய்ய தேவையான சிகிச்சையை மேற்கொண்டால் தான், குழந்தை பிறப்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

Kokila

Next Post

மாஸ் அறிவிப்பு...! தமிழகம் முழுவதும் ஆவின் தண்ணீர் விற்பனை திட்டம்...! அமைச்சர் அதிரடி....!

Fri May 19 , 2023
ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால்‌ விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால்‌ அரசு தான்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. எனவே அனுமதி இல்லாமல் பால்‌ விற்பதை தவிர்க்கும்‌ வகையிலான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் ஆவின்‌ […]

You May Like