நாம் எப்போதெல்லம் உடல்நலக்குறைவு அல்லது நோயால் அவதிப்படுகிறோமோ, அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். பெரும்பாலான மருந்துகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நம்மில் பெரும்பாலோர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த மருந்துகளில், பாராசிட்டமால் (Paracetamol) என்பது முதன்மையான மருந்தாக உள்ளது.. பாராசிட்டமால் ஒரு ஆண்டிபிரைடிக் (antipyretic) மருந்தாகும், இது பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளிலிருந்து நிவாரணம் பெற அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்..

லேசான காய்ச்சல் அல்லது தலைவலி இருந்தால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வதை எடுப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.. இருப்பினும், லேசான காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தேவையில்லை. இதன் விளைவாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான செயல்முறை பாதிக்கப்படுகிறது.. ஆனால் இந்த மருந்து உண்மையில் தேவைப்படும்போது, அது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. இது நமது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது என்றும், நோய், தொற்று மற்றும் காயங்களைச் சமாளிக்க உடலால் தயாரிக்கப்படும் புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியை பாராசிட்டமால் தடுக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..
இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.. பாராசிட்டமால், கருவின் வளர்ச்சியைத் தடுக்கும் என்றும், பல வகையான பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பாராசிட்டமால் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.. டாக்டர் கெவின் கிறிஸ்டென்சன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், பாராசிட்டமாலின் பக்கவிளைவுகளை ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ் ஆர்டர் ( hyperactivity disorder,) autism, கவனக்குறைவுக் கோளாறு, பேசும் போது பிரச்சனை மற்றும் IQ அளவு குறைவு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.. தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே பாராசிட்டமாலைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.. கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனத்திறன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறனையும் பாதிக்கிறது.