fbpx

தேமுதிக பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா..!! விஜயகாந்தை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்..!!

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அவரைக் கண்ட கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியினரை பார்த்து கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை விஜயகாந்த் வெளிப்படுத்தியபோது, பலர் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சித் தலைவரும் தனது கணவருமான விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதையடுத்து, கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தற்போதைய சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரே பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது சரிந்து விழுந்து இறந்த பெண்.! கொலையா.? நாடகமாடிய கணவன், மாமியார் உட்பட 3 பேர் கைது.!

Thu Dec 14 , 2023
ஈரோடு மாவட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய வழக்கில் கணவன் மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பூரணி(28). இவர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதன் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மதன்குமார் கணினி பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

You May Like