குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்த பிறகு அவர்களுக்கு தினமும் வித்யாசமான ஸ்நாக்ஸ் கொடுப்பது சவாலான ஒன்று தான். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த அதே சமயம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுப்பது மிகவும் கடினம். அப்படி நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா?? இனி கவலை வேண்டாம். சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு முறுக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து, அதன் மேல் தோலை நீக்கிவிட்டு துருவிவிடுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக் கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து விடுங்கள்.. பின்னர், அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் இருக்கும்போது, முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு பிழிந்து விடவும்.
நாம் எண்ணெயில் போட்ட மாவு மொறு மொறு என்று சிவப்பு பதத்திற்கு வந்தவுடன் அதை எடுத்து விடுங்கள்.. இப்போது, சுவையான ஆரோக்கியமான முறுக்கு தயார்..