fbpx

ஜூன் 15ம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !!

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை திடீரென ரத்தானது. அதன்பிறகு குடியரசுத் தலைவர் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்க உள்ளார்.  இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

Baskar

Next Post

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் குறையாத வெயில்- 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவு!!

Tue May 30 , 2023
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனை தொடர்ந்து மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் […]

You May Like