fbpx

சென்னை வருகிறார் ஜனாதிபதி..!! பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி..!! ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை (அக்.27) நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்குர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார் ஜனாதிபதி. விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து காரில் சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

இதையடுத்து, நாளை காலை 9 மணியில் இருந்து 9.30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடக்கும் 8-வது பட்டமளிப்பு விழாவில் காலை 10.15 மணி முதல் 11.15 மணி வரை கலந்து கொள்கிறார்.

பின்னர், காரில் புறப்படும் குடியரசுத் தலைவர், பகல் 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு‌, இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையே, ஜனாதிபதி திரெளபதி முர்மு சென்னை வரும் சமயத்தில் நேற்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இன்று சென்னை வரும் ஜனாதிபதி, ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க போவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. எனினும் தற்போது, ஆளுநர் மாளிகை விவகாரம் பரபரப்பை தந்துள்ளதால், ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடம் மாற்றம் செய்யப்படுமா? என்று தெரியவில்லை. ஆனால், ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பெண்களே..!! இனி ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது போலயே..!! திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு..!!

Thu Oct 26 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இந்த மகளிர் உரிமைத்தொகை பலருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், உரிமைத்தொகை குறித்து அடிக்கடி மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும். மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி அதில் பணவசதி கொண்டவர்கள் யாராவது உரிமை தொகை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் […]

You May Like