fbpx

மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்?… தொடர் வன்முறை சம்பவங்களால் நடவடிக்கை!… முதல்வர் பிரேன்சிங் தகவல்!

தொட்ர்ந்து வன்முறை சம்பவங்கள் நீடித்துவருவதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் என அவ்வபோது கொல்லப்படுகின்றனர். இந்த மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முதல்வர் என் பிரேன் சிங் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து என் பிரேன் சிங் தன் ட்விட்டர் பதிவில், “மாநில நிலவரம் குறித்து உள்துறை அமமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்களை விவாதித்தேன். மணிப்பூர் மாநில மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன.

Kokila

Next Post

ரெடியாக இருங்க...! TNPSC குரூப் 2, 2A கலந்தாய்வு தேதி குறித்து முக்கிய அப்டேட் வெளியானது...! முழு விவரம்

Sun Feb 4 , 2024
அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2A பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. சான்றிதழ் சரிபார்ப்பு […]

You May Like