fbpx

அடுத்தடுத்து சிக்கும் பாதிரியார்கள்..!! ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்..!! தென்காசியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், கடந்த சில தினங்களுக்கு முன் பாலியல் புகாரில் சிக்கி, தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தென்காசியில் மற்றொரு பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ (29) பேச்சிப்பாறை மலங்கரை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது, நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தென்காசி மாவட்டம் வடக்கு சிவகாமிபுர தேவாலயத்தில் ஸ்டான்லி குமார் என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில். இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்யாணி என்பவர், தனது மகளிடம் பாதிரியார் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்,’ தேவாலயத்திற்கு சென்ற எனது மகளிடம் வயிற்றில் கை வைத்து ஜெபிக்கிறேன் எனக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தேவாலயத்திற்குள் கேமராக்கள் பொருத்தி, பிரார்த்தனை செய்ய வரும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஆலங்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் இன்று பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அடுத்தடுத்து பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

யூடியூபர்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு..!! இனி இந்த வீடியோக்களை போட முடியாது..!!

Wed Mar 22 , 2023
கையில் செல்போன் இருந்தாலே யூடியூப் சேனல் தொடங்கிவிடலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் பலரும் இஷ்டத்துக்கு வீடியோ வெளியிட்டு போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால், உண்மை பின்தள்ளப்பட்டு பதற்றம், வன்முறை சம்பவங்கள் நிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான முகப்புப் படங்களும் வைத்து வீடியோக்கள் குறித்து பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேலும் 110 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு […]

You May Like