fbpx

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற பிரதமர்.. அபராதம் விதித்த காவல்துறை..

ஓடும் காரில் சீட் பெல்ட் அணியாததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார்.. இந்நிலையில் காரில் பயணிக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக ரிஷி சுனக்கிறகு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்த படி வீடியோ மூலம் பேசினார்.. அந்த வீடியோவில் அவர் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன..

இதையடுத்து பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது குறித்து பலரும் விமர்சித்திருந்தனர்.. எனினும் தான் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு சிறிய கிளிப்பைப் படமாக்க பிரதமர் எனது சீட் பெல்டை கழற்றினேன்.. ஆனால் அது என் தவறு.. அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்..” என்று தெரிவித்தார்..

இந்நிலையில் நேற்று லங்காஷ்யர் காவல்துறை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்தில், காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும்.. சீட் பெல்ட் அணியவில்லை எனில் உடனடியாக 100 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டும்.. சீட் பெல்ட் அணியாததற்கு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றம் மூலம் 500 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

#கிருஷ்ணகிரி: தங்கையை காதலித்த அண்ணன்.. கண்டித்த பெற்றோர்.. கிணற்றில் விழுந்து தற்கொலை..! 

Sat Jan 21 , 2023
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொலுகாக் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 13ம் தேதி பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். கிராமத்தில் உள்ள தனது தந்தையின் உறவினர் மகள் நாகம்மா என்ற பெண்ணை கிரீஷ் காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரிஷ்விற்கு தங்கை. மற்றும் கிரீஷ் தகாத காதலை ஏற்க மறுக்கும் உறவைக் கொண்டுள்ளனர். கிரிஷ் விடுமுறைக்கு […]

You May Like