fbpx

நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்கும் பிரதமர்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு..!!

நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், 2021ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது. அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது. இந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைன் போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்கும் பிரதமர்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு..!!

அதன்படி, தமிழகத்தில் மே 21ஆம் தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்றைய தினம் மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன. இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இந்நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, மத்திய அரசு, வருகிற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி நீங்கள் இதையும் செய்ய முடியும்...! மத்திய அரசு தகவல்

Thu Oct 20 , 2022
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மத்திய பதிவு பராமரிப்பு முகவர்கள் சந்தாதாரர்களை மையமாக கொண்ட இணைய சேவைகளை அளிப்பதற்காக டிஜி லாக்கர் பார்ட்னர் நிறுவனங்களாக மாறியுள்ளன. அதன் படி, டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி கணக்கு தொடங்குதல்.. டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள முகவரியை புதுப்பித்தல்க. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும். […]

You May Like