fbpx

பாகிஸ்தானை வீழ்த்தி சிறப்பான வெற்றி!… இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலகக் கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளதாக இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12வது லீக் ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 200 ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டி விட முயற்சியுடன் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் முயற்சி பலன் அளித்தது. 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49, இமாம் உல் ஹக் 36 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டய, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வரலாற்றை தொடர அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சும்பன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஸ்கோர் மளமளவென உயர்ந்து வெற்றியை சுவைக்க உதவியது. அதன்படி, 30.3 ஓவர்களிலேயே 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதன்படி, இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 86 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள், கே.எல்.ராகுல் 19 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம், உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடுதலாக ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறையும் தக்கவைத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

சிக்கல்...! அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கொடுக்கனும்...! வரும் 18-ல் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு...!

Sun Oct 15 , 2023
ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தான். இந்த திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் என்று அனைத்து எதிர்கட்சிகளாலும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் […]

You May Like