PM Modi: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தோடாவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள நிலையில், பாரமுல்லா என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று(செப்.,14) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 1982ம் ஆண்டு பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் பல்வேறு சதி திட்டம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை, பாதுகாப்பு படையினர், சக் தப்பர் க்ரீரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் பாரமுல்லாவில் இரவு முழுவதும் தொடர்ந்தது. அப்போது, என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அதிகாரிகளின் கூற்றுப்படி, இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: மீண்டும் புதிய வைரஸை உருவாக்கியுள்ள சீனாவின் வுஹான் ஆய்வகம்…!