அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்திய பயணத்தின் எதிரொலியாக கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் ஆப்பிள்கள் உட்பட ஆறு அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை இந்தியா நீக்கியுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்திருந்த அமெரிக்காவின் முடிவுக்கு பதிலடி தரும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு, அமெரிக்காவின் 28 பொருட்களுக்கான வரியை இந்தியா உயர்த்தியது. தற்போது இதில் கொண்டைக்கடலை, பருப்பு, வால்நட், உலர் பாதாம், ஓடுடன் கூடிய பாதாம், ஆப்பிள் என ஆறு பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கியுள்ளது . அதனடிப்படையில், கொண்டைக்கடலை 10 சதவீதம்,பருப்பு 20 சதவீதம், வால்நட் 20 சதவீதம், ஆப்பிள் 20 சதவீதம் புதிய, உலர் பாதாம் கிலோவுக்கு 7 ரூபாய், ஓடுடன் பாதாம் கிலோவுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சில எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்திய நிலையில் ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டு 28 அமெரிக்க தயாரிப்புகள் மீதான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியது. ஜி-20 மாநாட்டுக்காக அமெரிக்க அதிபரின் வருகையால் தற்போது வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.