fbpx

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி..

அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உடன், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதினார். டை-பிரேக்கர் வரை சென்ற இப்போட்டியில் பிரக்ஞானந்தா நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். இதனையடுத்து துக்ளக்கோப்பை செஸ் தொடரில்வெள்ளிப் பதக்கம் வென்றார். நேற்றைய தினம் தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அறிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவை பாராட்டி கவுரவிக்கும் விதமாக ஊக்கத் தொகையான ரூ.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி ஸ்டாலின் வாழ்த்தினார்

இந்நிலையில் இன்று உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பிரக்ஞானந்தாவுடன் சந்திப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி “உங்களை உங்கள் குடும்பத்துடன் சந்தித்ததில் மகிழ்ச்சி எனவும், நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் உதாரணம் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உன்னை நினைத்து பெருமை!” என்று பதிவிட்டிருந்தார்.

Kathir

Next Post

சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறீர்களா?… இப்படித்தான் உங்களுக்கு வரி விதிக்கப்படும்!

Fri Sep 1 , 2023
நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வாறு வருமான வரி விதிக்கப்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட் ஆக்கிரமித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக பலரது பொருளாதார நிலைமை சிக்கலாக்கியது. அப்போது நிறைய பேர் பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட தொடங்கினர். […]

You May Like