fbpx

உலக சாதனை படைத்த பிரதமர் மோடி!… யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோர் என்ற இலக்கை கடந்து அசத்தல்!

பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2 கோடி என்ற இலக்கை கடந்துள்ள நிலையில், அதிகம் பின்தொடர்வோரை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.

உலகத் தலைவர்கள் பலருக்கும் யூடியூப் சேனல் உள்ளது. இதில் அவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறும். இதை உலகம் முழுவதும் பலர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நேற்று 2 கோடி என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த இலக்கை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜேர் பல்சனரோ உள்ளார். இவரது யூடியூப் சேனலை 64 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 3-வது இடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது யூடியூப் சேனலை 11 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 4-வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். இவரது யூடியூப் சேனலை 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.

உலகத் தலைவர்களின் யூடியூப் சேனல்களில் உள்ள விஷயங்கள் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற கணக்கிலும், பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் முதல் இடத்தில் உள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 224 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இது ஜெலன்ஸ்கியின் யூடியூப் சேனல் பார்க்கப்பட்டதை விட 43 மடங்கு அதிகம்.

பிரதமர் மோடியின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவைதான் யூடியூப் சேனலில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி முதல் இடத்தில் இருப்பதற்கான காரணம் என கூறப்படுகிறது. மோடியின் யூடியூப் சேனலில் வீடியோ காட்சிகள் மொத்தம் 450 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. இந்த சாதனைதான் அவரது உலகளாவிய பிரபலத்துக்கு காரணம் கூறப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் அரங்கில் மேலோங்கி நிற்பதால் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் ஆதிக்கம் செலுத்துகிறது.

Kokila

Next Post

வருமான வரி தாக்கல் செய்ய தாமதமா?… டிச. 31 வரை தான் கெடு!… கடைசி வாய்ப்பு!

Wed Dec 27 , 2023
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியை (ITR) தாக்கல் செய்யவதற்கான கடைசி வாய்ப்பு டிசம்பர் 31,2023 ஆகும். இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் தாமதமாகத் தாக்கல் செய்தால் வட்டியுடன் அபராதமும் செலுத்த வேண்டி வரும். அதனால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், சாதாரண நிலுவைத் தேதிக்கு முன் தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியவர்களுக்கு […]

You May Like