தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 9ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 9ம் தேதி தமிழகம் வரவுள்ளார். 2024 ஜனவரியில் இருந்து அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர், ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
கோயம்புத்தூர் போல், சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்தி, பாஜக வேட்பாளர்களான தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வம், ஆர்.சி.பால் கனகராஜ், பொன்.வி.பாலகணபதி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களான வி.என்.வேணுகோபால், ஜோதி வெங்கடேசன் ஆகியோருக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து, ஏப்ரல் 17ஆம் தேதிக்கு முன் நீலகிரி, கோவை, பெரம்பலூர் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு மோடி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.