நாட்டின் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எல்ஐசியின் பீமா சகி யோஜனா (எம்சிஏ) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபரின் நியமனம் சம்பள நியமனமாகவோ அல்லது கார்ப்பரேஷன் ஊழியராகவோ கருதப்படாது.
பீமா சாகி யோஜனா திட்டம் :
எல்ஐசியின் ‘பீமா சாகி யோஜனா’ திட்டம், 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அவர்கள் சிறப்பு பயிற்சி மற்றும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறுவார்கள். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணியாற்றலாம். பட்டதாரி பீமா சாகிஸ் எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபிஸர் பதவிகளுக்குப் பரிசீலிக்கப்படுவதற்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
எவ்வளவு உதவித்தொகை?
முதல் ஆண்டு: ரூ 7,000 உதவித்தொகை கிடைக்கும்.
– இரண்டாம் ஆண்டு: ரூ. 6,000/- (முதல் உதவித்தொகை ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தபட்சம் 65% க்கு உட்பட்டது, இரண்டாவது உதவித்தொகை ஆண்டின் தொடர்புடைய மாதத்தின் இறுதியில் நடைமுறையில் இருக்கும்)
– மூன்றாம் ஆண்டு: ரூ. 5,000 (இரண்டாம் உதவித்தொகை ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தது 65% க்கு உட்பட்டு மூன்றாம் உதவித்தொகை ஆண்டின் தொடர்புடைய மாதத்தின் இறுதியில் நடைமுறையில் இருக்கும்)
இந்த திட்டத்திற்கு விண்ணப்பப்பதற்கான நேரடி லிங்க் இதோ : https://agencycareer.licindia.in/agt_req/New_Lead_Sakhi_Candidate_Data_entry_For_NewWeb.php
விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும் :
வயதுச் சான்றின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல், முகவரிச் சான்றின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல், கல்வித் தகுதிச் சான்றிதழின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
எனினும் தற்போது எல்.ஐ.சி முகவராக இருக்கும் நபர்கஈன் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
எல்.ஐ.சியின் ஓய்வுபெற்ற ஊழியர் அல்லது மறு நியமனம் கோரும் முன்னாள் முகவரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அதே போல் தற்போதுள்ள முகவர் இந்த திட்டத்தின் விண்ணப்பிக்க முடியாது.
Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு..? 8-வது ஊதிய குழு.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..