fbpx

குடியரசுத் தலைவர் முர்மு லண்டன் புறப்பட்டார்….

லண்டனில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்.

ராணி 2ம் எலிசபெத் (96) கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காலமானார். பால்மொரல் கோட்டையில் இருந்து அவரது உடல் எடுத்துவரப்பட்டு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் சவப்பெட்டியில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கில் உல நாடுகளிலிருருந்து 500க்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றார்.  இதற்காக இன்று அவர் லண்டன் புறப்பட்டார்.

ராணியின் மறைவை ஒட்டி இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 12ம் தேதி இங்கிலாந்தின் உயரதிகாரிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 3 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள முர்மு 19ம் தேதி இறுதிச்சடங்கில் தனது அஞ்சலியை பதிவு செய்வார்.

Next Post

காப்பீட்டு தொகை கொடுக்காத எல்.ஐ.சி. … 2 மாதத்திற்குள் பாலிசிதாரருக்கு கொடுக்க ஐகோர்ட் உத்தரவு…

Sat Sep 17 , 2022
பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடித்து வந்த எல்.ஐ.சி. நிறுவனம் 2 மாதத்திற்குள் தொகை உரியவருக்கு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்யைச் சேர்ந்தவர் திவ்யா . இவர் கடந்த 2009 மற்றும் 2010ல் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 காப்பீடுகள் எல்.ஐ.சியில் எடுத்துள்ளார். தந்தையின் பேரில் எடுத்த காப்பீடு அவர் தந்தை 2012ல் இறந்ததை அடுத்து காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாட்களாகியும் […]

You May Like