fbpx

அடிதூள்.. சென்னையில் மட்டுமே 120 மக்கள் மருந்தகங்கள்…! மிகவும் குறைவான விலையில்…!

மக்கள் பணத்தை சேமித்த பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது

மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் சென்னையில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் உள்ள 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள் மற்றும் 250 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னையில் மட்டும் 120 மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான உயிர்காக்கும் மருந்துகளை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை சார்பில், அதிக தேவையுள்ள மருந்துகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் வழஙகப்பட்டு வருவதன் மூலமாக கடந்த நிதியாண்டில் ரூ. 5,000 கோடி அளவிற்கு பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

இதை செய்யத் தவறினால் ஆகஸ்ட் 31க்குப் பிறகு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்..

Tue Aug 30 , 2022
கடந்த பல மாதங்களாக, பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. KYC-ஐ அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கி வசதிகளின் பலன்களை எளிதாகப் பெறுவதுடன், வங்கிகளும் தங்கள் வங்கிச் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும். KYC செயல்முறையை அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மற்றும் அது தொடர்பான பிற சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது. அந்த வகையில் பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் […]

You May Like