fbpx

பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள்!… பாதுகாப்பு அம்சங்களில் புதிய அப்டேட்!… வாட்ஸ் அப் நிறுவனம்!

பயனர்கள் தங்களின் தனிப்பட்ட உரையாடல்களை கைரேகை அல்லது பாஸ்கோட் மூலம் பாதுகாக்கப்படும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்யவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக உள்ள வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் புதிய புதிய அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கிவருகிறது. அந்த வகையில் தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தற்போது, புதிய அம்சத்துடன் கூடிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, பயனர்கள் தங்களின் தனிப்பட்ட உரையாடல்களை கைரேகை அல்லது பாஸ்கோட் மூலம் பாதுகாக்கப்படும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்யவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், யாரேனும் பயனரின் அனுமதி இல்லாமல் ஃபோனை அணுக முயற்சித்து, முறையான கைரேகையை வழங்கத் தவறினால், அந்த உரையாடலை அழித்தால் மட்டுமே அதை திறக்க முடியும் என்று கூறியுள்ளது. உரையடல்களை பூட்டுவதற்கான திறன் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் பயன்பாட்டின் எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்றுவாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

இந்த ரயிலில் சென்றால் இலவசம் தான்!... 73 ஆண்டுகளாக இலவச பயணம் வழங்கிவரும் ரயில்!... இந்தியாவில் எங்கு தெரியுமா?

Sun Apr 2 , 2023
வட இந்தியாவில் பக்ரா பியாஸ் என்ற நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படும் ரயில் கடந்த 73 ஆண்டுகளாக தனது பயணிகளுக்கு இலவச பயணத்தை வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் பக்ரா பியாஸ் எனும் நிர்வாகம் தான் இந்த இலவச ரயில் சேவையை இயக்கிவருகிறது.வட இந்தியாவில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கும், பஞ்சாப் மாநிலத்திற்கும் இடையே தான் இந்த சேவை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில் ‘பக்ரா நங்கல்’. […]

You May Like