அரசுப் பணியில் உள்ளவர்கள் பென்ஷன் வாங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களும் பென்ஷன் வாங்கலாம்.
ஓய்வு காலத்திற்கு பிறகு அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம்? என்ற மனநிலையில் உள்ளவர்களுக்காக மத்திய அரசு கடந்த 2011 முதல் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட் ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம் என அறிவித்தது. இந்த திட்டத்தின் பெயர் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அரசுப் பணியில் இல்லாதவர்களும், ஓய்வுகாலத்தில் பென்ஷன் பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 18 முதல் 40 வயது வரையிலான அனைத்து இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதில் இருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு அந்த தொகை கிடைக்கும். மொத்தத்தில் ஓய்வு காலத்திற்கு ஏற்ற ஒரு பயனுள்ள திட்டமாகும். 18 வயதில் நீங்கள் இத்திட்டத்தில் இணைகிறீர்கள் என்றால், தினசரி 7 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதந்தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். ஒருவேளை 18 வயதுக்கு மேல் நீங்கள் இத்திட்டத்தில் இணைகிறீர்கள் என்றால், அதற்கு ஏற்றவாறு உங்களது முதலீடு அமையும்.
அடல் பென்ஷன் திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்கிக் கொள்ளலாம். பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளைக்கு 100-க்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்ட கணக்குகள் உள்ளன. ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக் கணக்கு, ஆதார் போன்றவை உங்களிடம் ஆவணங்களாக கேட்கப்படும்.
Read More : இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்..!! ஆனா, யாருமே இங்க குடியிருக்க மாட்டாங்க..!! ஏன் தெரியுமா..?