fbpx

’தனியார் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம்’..! சீமான் கடும் கண்டனம்

அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். மத்திய அரசு ஏன் அழுத்தம் கெடுக்கிறது? ஏனென்றால் அவரது (மோடி) நண்பர் அதானி தான் தயாரிக்கிறார். அவருக்கு லாபம் வர வேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள்.

’தனியார் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம்’..! சீமான் கடும் கண்டனம்

அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திகூட அரசிடம் இல்லை. எல்லாம் தனியர் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம். அது மோசமான பொருளாதார கொள்கை. அதுதான் இலங்கையில் நடந்தது. அங்கு இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 நாள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த நிலைமை நமக்கு வருவதற்கு முன்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.240 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்...

Tue Aug 9 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]

You May Like