Private school: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடையே குறைந்தபாடில்லை.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பல்வேறு மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆர் சி கிறிஸ்தவ மிஷனரியால் கடந்த 45 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள லயோலா கான்வென்ட் பெண் குழந்தைகள் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு லயோலா கான்வென்ட் பெண் குழந்தைகள் பள்ளியில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதை அறிந்து, நேற்று மாலை முதலே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பெற்றோர்கள் பள்ளியின் முன்பாக குவிந்து வருகின்றனர். முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, தற்போது வரை வரக்கூடிய பெற்றோர்களின் பெயர்களை வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்து வருகின்றனர்.
சில பெற்றோர்கள் பள்ளியின் வாசலில் இரவு பொழுதை தூங்கிக் கழிக்கும் விதமாக ஆயத்தமாகி வந்துள்ளனர். இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில பெற்றோர்கள் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும் சாப்பிட வேண்டிய உணவையும் டிபன் பாக்ஸ்களில் எடுத்து வந்து இங்கு வைத்து சாப்பிட்டுள்ளனர். விண்ணப்பம் பெற இரவே வர வேண்டாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்தும் நள்ளிரவு முதலே பெற்றோர் பள்ளி வாசலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Readmore: களைகட்டும் சீசன்!… ரசாயன மாம்பழங்களை கண்டறிவது எப்படி?