fbpx

அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிய பிரியங்கா காந்தி..!! பணமோசடி வழக்கில் அதிரடி..!! கலக்கத்தில் காங்கிரஸ்..!!

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006இல் டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா என்பவரிடமிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 40 கனல் (ஐந்து ஏக்கர்) அளவிலான விவசாய நிலத்தை வாங்கி, அதே நிலத்தை பிப்ரவரி 2010இல் அவருக்கு விற்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

அமலாக்கத்துறை கூற்றுப்படி, ஃபரிதாபாத்தின் அமிபூர் கிராமத்தில் உள்ள நிலம் பஹ்வாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதே முகவரிடமிருந்து தான் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவும் 2005இல் 40.08 ஏக்கர் அளவிலான மூன்று துண்டு நிலத்தை வாங்கி அதே நிலத்தை டிசம்பர் 2010ஆம் ஆண்டில் அதே நபருக்கு விற்றார். 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, பணமோசடி, அந்நியச் செலாவணி மற்றும் கருப்புப் பணச் சட்டங்களை மீறுதல் ஆகியவற்றிற்காக பல ஏஜென்சிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சுமித் சாதாவுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதை மறைத்து பண்டாரிக்கு உதவியதாக, சிசி தம்பி வெளிநாட்டு வாழ் இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கும் பிரியங்கா காந்திக்கு நிலத்தை விற்றுக்கொடுத்த பஹ்வா தான் நிலத்தை விற்றுக்கொடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ராபர்ட் வதோத்ராவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்தியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அவரும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Chella

Next Post

காலாவதியான பொருட்களை விற்று ரூ.1,163 கோடி வருவாய் ஈட்டிய மோடி அரசு!… இது 2 சந்திராயன்-3 பட்ஜெட்டுக்கு சமம்!

Fri Dec 29 , 2023
பழைய மற்றும் காலாவதியான பொருட்களை விற்றதன் மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ.1163 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், இரண்டு சந்திரயான் திட்ட பணிகள் பட்ஜெட் அளவுக்கு நிதியளித்திருக்கலாம் என்று கருத்துகள் எழுகின்றன. இந்தியா வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி செலவானது. இந்த நிலையில் 2021 அக்டோபரில் இருந்து பழைய உபயோகமில்லாத பொருட்களை விற்றதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.1,163 […]

You May Like