fbpx

பிரியா மரணம்..!! சிக்கியது முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்வீட்..!! விளாசும் பாஜக தலைவர்கள்..!!

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியா மரணம் அடைந்தார். வீராங்கனை பிரியாவின் மரணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

பிரியா மரணம்..!! சிக்கியது முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்வீட்..!! விளாசும் பாஜக தலைவர்கள்..!!

இந்நிலையில் 2018இல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டதை மேற்கோள்காட்டி பாஜக தலைவர்கள், விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், ”ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று டிசம்பர் 26, 2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

நேற்று, இன்றைய @CMOTamilnadu மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது. இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? இது ஊழல் அரசு என்பதையும், உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே? சொன்னது நீ தானா சொல் சொல் சொல்….. என பதிவிட்டுள்ளார்.

இதேபோல முதல்வர் ஸ்டாலினின் பழைய ட்வீட்டை மேற்கோள்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தற்போது வளர்ந்து வரும், நம்பிக்கைக்குரிய கால்பந்து வீராங்கை பிரியா, அரசு மருத்துவமனையில், அதுவும் உங்கள் தொகுதியில் அறுவை சிகிச்சையின் மூலம் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு அப்பாவி குழந்தை இழக்கப்படாமல் இருக்க இப்போது இருந்தே செயல்படுங்கள் என்றும் அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணியை தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ‘எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்ற உங்கள் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கனவை எங்களுக்கு விற்காதீர்கள் என்று விமர்சித்துள்ளார்.

Chella

Next Post

வீட்டிற்கு வந்த இன்ஸ்டா நட்பு..!! விருந்து வைத்த பிளஸ்1 மாணவி..!! தாய் கண்முன்னே நடந்த சம்பவம்..!!

Wed Nov 16 , 2022
மதுரவாயலில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, அமைந்தகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், […]

You May Like