fbpx

புரோ கபடி லீக் 2024!. அதிரடி காட்டிய பாட்னா பைரட்ஸ்!. குஜராத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ஜெய்ப்பூர்!

Pro Kabaddi League 2024: புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றிவாகை சூடின.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (நவ.15) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், 52-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பாட்னா அணி 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 32-24 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

Readmore: ஷாக்!. டெல்லியில் ரூ.900 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!. ஈரானை சேர்ந்தவர்கள் கைது!. அமித் ஷா கடும் எச்சரிக்கை!

English Summary

Pro Kabaddi League 2024!. Patna Pirates in action! Jaipur won by defeating the Gujarat team!

Kokila

Next Post

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?. உண்மை என்ன?.

Sat Nov 16 , 2024
Is it good to exercise during menstruation? What is the truth?

You May Like