fbpx

புரோ கபடி லீக் 2024!. இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?. பெங்கால் வாரியஸ் – தமிழ் தலைவாஸ் பலப்பரீட்சை!.

Pro Kabaddi League 2024: புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பெங்கால் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளும், 2ஆவது போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

புரோ கபடி லீக் தொடரின் 11ஆவது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 18ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான் உள்பட மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதுவரையில் 56 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ஹரியானா அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று யு மும்பா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திலும், புனேரி பல்தான் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 4ஆவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

கடைசி இடத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் 10ல் 2 வெற்றியுடன் 12ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வி ஒரு போட்டி டையில் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 57ஆவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறுகிறது. இதே போன்று 58ஆவது போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு நொய்டாவில் நடைபெறுகிறது.

Readmore: பருவநிலை மாற்றம்!. இந்தியாவில் வெப்பம், நோய்ப்பரவல் அதிகரிக்கும்!. WHO விஞ்ஞானி எச்சரிக்கை!

English Summary

Pro Kabaddi League 2024!. Who will win today’s match? Bengal Warriors – Tamil Thalaivas Multiple Exam!.

Kokila

Next Post

மாதம் ரூ.15,000 தொகுப்பூதியம்... பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு தமிழக அரசின் வேலை...!

Sat Nov 16 , 2024
Monthly salary of Rs. 15,000... Tamil Nadu government job for graduates

You May Like