ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவின் ஆடவர் கபடி நட்சத்திரங்கள் தங்கப் பதக்கம் வென்றனர். இந்தநிலையில் ப்ரோ கபடி லீக் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி ,ப்ரோ கபடி லீக் ஏலம்: பிகேஎல் சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி உள்பட 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். ஒரு அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இடம் பெறுவார்கள். அந்தவகையில் தற்போது 84 வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன. பிகேஎல் 10க்கு அணி வாரியான வீரர்களின் சம்பளம் 5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதாவது PKL சீசன் 10 வீரர்கள் ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். பிரிவுகள் A, B, C மற்றும் D மற்றும் வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ‘ஆல்-ரவுண்டர்கள்’, ‘டிஃபெண்டர்கள்’ மற்றும் ‘ரைடர்கள்’ எனப் பிரிக்கப்படுவார்கள். வகை A – ரூ 30 லட்சம், வகை B – ரூ 20 லட்சம், வகை C – ரூ 13 லட்சம், வகை D – ரூ 9 லட்சம் என ஒவ்வொரு வகைக்கும் அடிப்படை விலைகள் உள்ளன. சீசன் 10 பிளேயர் குழுவில் 2023 கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் 2023 இன் இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகளைச் சேர்ந்த 24 வீரர்கள் உட்பட 500+ பேர் இருப்பார்கள். ஒவ்வொரு உரிமையாளருக்கும் கிடைக்கும் சம்பள பர்ஸ் ரூ. 5 கோடி ஆகும்.
ப்ரோ கபடி லீக் ஆட்டத்தின் முதல் நாள் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், Disney+ Hotstar-ம் நேரடியாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. PKL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ: தமிழ் தலைவாஸ் நிறுவனம் பவன் குமார் செராவத்தை 2.26 கோடி ஏலம் எடுத்துள்ளது. விகாஷ் கண்டோலா: ரூ 1.70 கோடி, பெங்களூரு புல்ஸ் அணி, மோனு கோயத்: ரூ. 1.51 கோடி, ஹரியானா ஸ்டீலர்ஸ், சித்தார்த் தேசாய்: ரூ 1.45 கோடி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி.