புரோ கபடி லீக் தொடரில், இன்று (நவம்பர் 15) நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து, தொடரின் இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்கள் நவம்பர் 10ஆம் தேதி நொய்டாவில் தொடங்கிய நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
புரோ கபடி லீக் தொடரில், நேற்று (நவம்பர் 13) ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், ஹரியானா ஸ்டீலர்ஸ் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாட்னா பைரேட்ஸ் 32 புள்ளிகள் எடுக்க, ஹரியானா ஸ்டீலர்ஸ் 37 புள்ளிகள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
இதில், ஹரியானா அணியின் வினய் 6 புள்ளிகளை எடுத்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம், ஹரியானா அணியானது 36 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 28 – 47 என்ற புள்ளிகள் எடுத்து தோல்வி அடைந்தது. இன்று (நவம்பர் 15) நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.