fbpx

புரோ கபடி லீக்!. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை?. செமி பைனலுக்கு நேரடியாக நுழைந்த அரியானா-டெல்லி அணிகள்!

Pro Kabaddi: 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய உ.பி.யோத்தாஸ் ஆட்ட நேர முடிவில் 44-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 22 போட்டியில் 13 வெற்றி, 6 தோல்வியுடன் (3 சமன்) 80 புள்ளி எடுத்த உ.பி., 3வது இடத்துக்கு முன்னேறியது.

பெங்களூரு அணி (22ல் 2 வெற்றி, 18 தோல்வி, 1 சமன்), 19 புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. தமிழ் தலைவாஸ் அணி, 8 வெற்றி, 13 தோல்வியுடன் (1 சமன்) 50 புள்ளி எடுத்து, 9வது இடம் பெற்று ஏற்கனவே கோப்பை வாய்ப்பை இழந்தது. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி.யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Readmore: ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!. 15 பேர் பலி!. பதிலடி கொடுக்கப்படும்!. தலிபான் சபதம்!

Kokila

Next Post

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பலாத்காரம் செய்த கொடூரம்..!! எங்கு தெரியுமா..?

Wed Dec 25 , 2024
The shocking incident of a man who was arrested and sent to prison for raping a 70-year-old woman, only to be released on bail and rape the same woman again has caused great shock.

You May Like