fbpx

வில்லங்கச் சான்றிதழ் பெறுவதிலும் வில்லங்கமா?

பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

வில்லங்கம்: இந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு. சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் ஆகியவற்றில் அடங்கி, அதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இன்று, அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு வில்லங்க சான்று தேவையாக உள்ளது. முன்பெல்லாம், இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்கு, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். ஆனால், இப்போது, ஆன்லைனில், வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்.

தகவல்கள் மாயமாகும்: இந்நிலையில், ஒரு பிரச்சனை முளைத்தது சில நாட்களுக்கு முன்பு. அதாவது, ஒரு சர்வே எண்ணில் குறிப்பிட்ட 5க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் பதிவாகும் நிலையில், அதற்கான வில்லங்க சான்றிதழில் சில தகவல்கள் மாயமாகி விடுகின்றன. இந்த தகவல்கள் விடுபடுவதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.ஒரு நிலம், குறிப்பிட்ட பாகங்களாக 8 பிரித்து விற்பனை செய்யப்படுகிறது என்றால், 5வது உட்பிரிவு வரை பிரச்னையும் ஏற்படுவதில்லை. மேல் உட்பிரிவுகள் ஏற்படும்போது, அதன் பிரதான சர்வே நம்பரை குறிப்பிட்டு வில்லங்கம் பார்த்தால், 6வது அதற்கு அப்பால் ஏற்பட்ட உட்பிரிவு விபரங்கள் மட்டுமே வருகின்றன. 5வது வரையிலான உட்பிரிவுகளில் நடந்த பரிமாற்ற தகவல்கள் விடுபடுகின்ற நிலை ஏற்படுகிறது.

வில்லங்க சான்றிதழ்: இந்த சான்றினை, தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும், இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம். இதற்காக லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை.

பதிவுத்துறை: இதனால், கட்டுமான அனுமதி மற்றும் வங்கிக்கடன் பெறுவதிலும் பிரச்சனை ஏற்படுவதால், பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவுத்துறை அமைச்சரிடம் புகார் தரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான வில்லங்க சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளதாக, இன்னொரு புகார் கிளம்பி உள்ளது. எழுத்து பிழைகளை சரி செய்ய கோரும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டும், கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அலுவலர்கள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளதாகவும், இப்படி தாமதப்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Maha

Next Post

இன்று ஆடி மாதத்தின் சிறப்பு நாளான ஆடி கிருத்திகை..!

Wed Aug 9 , 2023
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை (ஆகஸ்ட் 09 ம் தேதி புதன்கிழமை வருகிறது). காலை 07.33 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி காலை 07.44 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. […]

You May Like