47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்நாடு அனுப்பிய விண்கலமான லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் சார்பில் லூனா-25 விண்கலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த இந்த விண்கலத்தை ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது லூன -25 விண்கலம் நிலவில் விழுந்து நொருங்கியுள்ளதாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடைசி சுற்று வட்டப்பாதையை குறைக்கும்போது ஏற்பட்ட சிக்கலால், தொடர்பை இழந்த லூனா-25 விண்கலத்தின் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பட்ட லூனா-25 திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியது ஏன் : உந்துவிசை அமைப்பில் மாற்றம் செய்யும்போது ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதியதாக தகவல். நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு நுழைந்த லூனா-25 விண்கலத்தின் இறுதிக்கட்ட பாதையை குறைக்கும்போது, விண்களத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, தொடர்பை இழந்த லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியுள்ளது.