அதிகாலை நேரத்தில் நாம் எழுந்து விட்டால் நமக்கு அந்த நாட்களில் அதிகப்படியான நேரம் கிடைப்பது போல இருக்கும். அதிகாலை நாம் எழுவது நமக்கு உடலுக்கு அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நிறைய பலன்களை தரக்கூடியதாக இருக்கிறது. சூரிய ஒளியில் நாம் நம்மை காலை வேளையில் காட்டும்போது நம் உடலுக்கு விட்டமின் டி கிடைக்கிறது. எனவே, உடல் இயற்கையாக ஊட்டச்சத்தை உற்பத்தி செய்ய இந்த விட்டமின் டி உதவுகிறது.
இப்படி பல நன்மைகளை கொடுக்கும் அதிகாலை எழும் பழக்கம் உணவு கோளாறு ஒன்றை ஏற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமீபத்திய ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது. காலையில் சீக்கிரம் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதால் பலருக்கு anorexia nervosa எனும் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் எடை குறைப்பு அல்லது எடை அதிகமாக வருகிறது போன்றவை அடங்கிய ஒரு உணவு கோளாறு ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட இவர்களால் அதிகாலையில் தூங்க முடியாது. அவர்களிடம் ஒருவகை தூக்கமின்மை நோய் இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்றும் அதிகாலை எழுவது மட்டும் தான் இந்த நோய் ஏற்பட காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கின்றனர்.