fbpx

தயாரிப்பாளர் ரவீந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? மூக்கில் டியூப்..!! சோகத்தில் மகாலட்சுமி..!!

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ரிவியூ செய்து வரும் ரவீந்தர், தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மூக்கில் டியூப் போட்டு பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமான நிலையில் ரவீந்தர் காணப்படுகிறார்.

இவ்வாறு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திர், விரைவில் உடல்நலம் சரியாகி மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன், ரவீந்தர் ஒருவரிடம் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிய வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு..!! எப்போது வரை தெரியுமா..? நீதிபதி அதிரடி உத்தரவு..!!

Thu Jan 11 , 2024
அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், […]

You May Like