fbpx

வெளியானது மாருதி சுசுகி யூ.வி.எக்ஸ் எலக்ட்ரிக் காரின் புகைப்படங்கள்….!

மாருதி சுசுகி நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக இருக்கிறது. இந்த கார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி மாடலாக இ.வி.எக்ஸ் எதிர்வரும் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அந்த காரின் உற்பத்தி நிலையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. சென்ற சில மாதங்களாகவே ஐரோப்பா நாட்டில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் முதல்முறையாக காட்சிக்கு வந்த ஈ.வி.எக்ஸ் நடுத்தர எஸ்.யூ.வி சந்தைக்கு ஏற்றதாக வர இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள கிரெட்டா எலக்ட்ரிக் சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள இருக்கிறது.

புதிய இ.வி.எக்ஸ், எஸ்.யூ.வி காரில் 60 கே டபிள்யு ஹச் பேட்டரி பெற்று அதிகபட்சமாக சுமார் 550 கிலோமீட்டர் தூரம் வரையில், பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று மாருதி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இரண்டாவதாக குறைந்த வரம்பை48kwh பேட்டரி அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வரம்பை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஈ.வி.எக்ஸ் எஸ்.யு.வி பரிமாணங்கள் 1300 மில்லி மீட்டர் நீளம், 1800 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1600 மில்லி மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி 3.0 செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, முதல் எலக்ட்ரிக் கார் எதிர்வரும் ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காருக்கான பல்வேறு பாகங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருப்பதால், பேட்டரி செல்லானது பி.ஒய்.டி நிறுவனத்தில் இருந்து சுசுகி பெற இருக்கிறது.

அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரமான வீல் ஆர்சு கூபே ரக வடிவிலான எஸ்.யூ.வி மாடலாக அமைந்திருக்கிறது.அனைத்து விளக்குகளும் எல்.ஈ.டியாக இணைக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஆண்டின் மத்திய பகுதியில், இந்த கார் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த காரின் விலை 18 லட்சத்திலிருந்து ஆரம்பமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

புற்றுநோயை உண்டாக்கும் சமையல் பாத்திரங்கள்..? இல்லத்தரசிகளே உடனே மாத்துங்க..!! உயிருக்கே ஆபத்து..?

Tue Aug 15 , 2023
நம் முன்னோர்கள் மண் பானைகள், தாமிரம், பித்தளை பொருட்களால் ஆன பாத்திரங்களில் சமைத்து வந்தனர். ஆனால், தற்போது என்னென்ன பொருட்களை வைத்து சமைக்கப்போகிறேன் என்பதில் காட்டும் கவனத்தை, எந்த பாத்திரத்தில் சமைக்கப்போகிறோம்? அது ஆரோக்கியமானதா? என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எனவே, அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களில் எது சிறந்தது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு சமையல் பாத்திரங்களுக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. சில பாத்திரங்கள் சில […]

You May Like