fbpx

விபச்சாரி, கள்ளக்காதலி, ஈவ் டீசிங் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த தடை..!! அதற்கு பதில் இப்படித்தான் அழைக்க வேண்டுமாம்..!!

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. இனிமேல் இந்த சொற்கள், சட்ட சொற்களஞ்சியத்தில் இருந்து வெளியேற்றப்படும். இந்த வார்த்தைகளுக்கு பதில் வேறு எந்த வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு முழுமையான கையேட்டையும் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த காலங்களில் வெளியான தீர்ப்புகளை விமர்சனம் செய்வது தங்களின் நோக்கம் அல்ல. இந்த கையேடு நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகவும் உதவியானதாக இருக்கும். தங்கள் மூலம் சமமான, சரியான நீதி பெற்றுத்தந்திருக்கிறது என்பதை தாங்கள் உறுதி செய்து கொள்வதற்கும் உதவும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

30 பக்கங்கள் கொண்ட கையேட்டில் பாலியல் வன்முறை தொடர்பான சட்டக் கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன. தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு பதிலாக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது விபச்சாரம், விபச்சாரி போன்ற வார்த்தைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும். மேலும், கள்ளக்காதலி என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தாமல், “ஒரு ஆணுடன் காதல் அல்லது திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்ட ஒரு பெண்” என்பதை பயன்படுத்த வேண்டும்.

ஈவ் டீசிங் என்ற சொல் “பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல்” என்று அழைக்கப்பட வேண்டும். “Gay” என்பதற்கு பதிலாக, ஒரு நபரின் பாலியல் நோக்கு நிலையை மிகவும் துல்லியமாக விவரிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும். House Wife என்பதற்கு பதில், “ஹோம் மேக்கர்” என்று பயன்படுத்தப்பட வேண்டும். முறையில்லாமல் பிறந்த குழந்தை என்ற வார்த்தைக்கு பதிலாக, “திருமணத் தொடர்பைத் தாண்டி பிறந்த குழந்தை அல்லது, திருமணமாகாத பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை” என்ற வார்த்தையை இனி நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

3 தடுப்பூசிகள் போட்டாலும் கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்படுவீர்கள்!… முன்னெச்சரிக்கை அவசியம்!

Sat Aug 19 , 2023
கொரோனா தடுப்பூசிகள் போட்ட பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகளவில் கோரத் தாண்டவம் ஆடிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இந்தவகை மாறுபாடுகளால் யாருக்கு வேண்டுமானாலும், கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா […]

You May Like